எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. – குறள்: 470
– அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்
கலைஞர் உரை
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாதற்கு அஞ்சும் மானியர்; வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார்.
மு. வரதராசனார் உரை
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
G.U. Pope’s Translation
A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.
– Thirukkural: 470, Acting after due Consideration, Wealth
Be the first to comment