குருவிரொட்டி இணைய இதழ்

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் – குறள்: 873


ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
குறள்: 873

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் துணையின்றித் தனியனா யிருந்துகொண்டே பலரொடு பகைகொள்பவன்; பித்தம் பிடித்தவரினும் பேதையானவன்.



மு. வரதராசனார் உரை

தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.



G.U. Pope’s Translation

Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman’s scorn.

Thirukkural: 873, Knowing the Quality of Hate, Wealth.