எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். – குறள்: 910
– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.
கலைஞர் உரை
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள்
காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்க
மாட்டார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு; மனைவியொடு கூடுதலாலேற்படும் பேதைமை ஒருகாலத்தும் உண்டாகாது.
மு. வரதராசனார் உரை
நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
G.U. Pope’s Translation
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman’s love, is never found.
– Thirukkural: 910, Being led by Women, Wealth.
Be the first to comment