குருவிரொட்டி இணைய இதழ்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் – குறள்: 110


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
. – குறள்: 110

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எத்துணப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத்தீவினைகள் நீங்கும் கழுவாய் ( பிராயச் சித்தம்) உண்டாம்; ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை.



மு. வரதராசனார் உரை

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.



G.U. Pope’s Translation

Who every good have killed, may yet destruction flee; Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free!

 – Thirukkural: 110, The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues