எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467
– அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்
கலைஞர் உரை
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செய்யத்தக்க வினையையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தொடங்குக; தொடங்கியபின் எண்ணுவோமென்று கடத்திவைப்பது குற்றமாம்.
மு.வரதராசனார் உரை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
G.U. Pope’s Translation
Think, and then dare the deed! Who cry,
‘Deed dared, we’ll think.; disgraced shall be.
– Thirukkural: 467, Acting After Due Consideration, Wealth
Be the first to comment