குருவிரொட்டி இணைய இதழ்

எண்ணியார் எண்ணம் இழப்பர் – குறள்: 494


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
– குறள்: 494

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் வினைசெய்தற்கேற்ற அரணான இடத்தை யறிந்து அங்குச் சென்று தங்கிய அரசர் அவ்விடத்தொடு பொருந்திநின்று வினை செய்வாராயின் ; அவரை முன்புவெல்ல எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தையும் இழப்பர் .



மு. வரதராசனார் உரை

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.



G.U. Pope’s Translation

The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

 – Thirukkural: 494, Knowing the Place, Wealth