எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. – குறள்: 424
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் மனதில் பதியுமாறு சொல்லி; பிறர் சொல்லும் நுட்பமான கருத்துகளையும், ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.