குருவிரொட்டி இணைய இதழ்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று – குறள்: 695


எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. – குறள்: 695

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள்



கலைஞர் உரை

பிறர் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்
கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசனுக்குப் பிறரோடு ஒரு மறைபொருள் பற்றிப் பேச்சு நிகழும்போது; அதில் எந்தப்பொருளையும் செவிசாய்த்து உற்றுக் கேளாமலும்; அவனை அணுகி வினவாமலும் இருந்து; பின் அம்மறை பொருளை அடக்கிவையாது அவனே வலியச் சொன்னால் அமைச்சர் முதலியோர் கேட்டறிக.



மு. வரதராசனார் உரை

(அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.



G.U. Pope’s Translation

Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!

 – Thirukkural: 695, Conduct in Presence of the King, Wealth