குருவிரொட்டி இணைய இதழ்

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு – குறள்: 426


எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
அவ்வது உறைவது அறிவு. – குறள்: 426

அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ
அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம்.



மு. வரதராசனார் உரை

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.



G.U. Pope’s Translation

As dwells the world, so with the world to dwell
In harmony – this is to wisely live and well.

 – Thirukkural: 426, The Possession of Knowledge , Wealth