எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. – குறள்: 107
– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்
கலைஞர் உரை
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை; ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவுடையோர்.
மு. வரதராசனார் உரை
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
G.U. Pope’s Translation
Through all seven worlds, in seven – fold birth,
Remains in mem’ry of the wise,
Friendship of those who wiped on earth,
The tears of sorrow from their eyes.
– Thirukkural: 107, The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues
Be the first to comment