எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62
– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்
கலைஞர் உரை
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பழிதோன்றாத நற்குணங்களையுடைய மக்களைப் பெறின்; பெற்றோரை எழுபிறவி யளவும் துன்பங்கள் அணுகா.
மு. வரதராசனார் உரை
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
G.U. Pope’s Translation
Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev’n-fold maze of birth.
– Thirukkural:62 , The Wealth of Children, Virtues