குருவிரொட்டி இணைய இதழ்

ஞாலம் கருதினும் கைகூடும் – குறள்: 484

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
. – குறள்: 484

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்


கலைஞர் உரை

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் ; காலம் அதற்குரிய வினையை அவன் தகுந்த கால மறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின் .


மு.வரதராசனார் உரை

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.


G.U. Pope’s Translation

The pendant world’s dominion may be won, In fitting time and place by action done.

 – Thirukkural: 484, Knowing the Fitting Time, Wealth