குருவிரொட்டி இணைய இதழ்

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் – குறள்: 29


குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணம்ஏயும் காத்தல் அரிது. – குறள்: 29

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்



கலைஞர் உரை

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நற் குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை; சினக்கப்பட்டாரால் நொடி நேரமேனுந் தடுத்தல் முடியாது.



மு. வரதராசனார் உரை

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.



G.U. Pope’s Translation

The wrath ‘tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.

 – Thirukkural: 29, The Greatness of Ascetics, Virtues