
குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 868
– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.
கலைஞர் உரை
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,
அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் அவனிடத்துள்ள குற்றங்கள் மட்டும் பலவாயிருப்பின் அவன் துணையில்லாதவனாவன்; அந்நிலைமை அவன் பகைவர்க்கு அரணாதலையுடைத்து.
மு. வரதராசனார் உரை
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
G.U. Pope’s Translation
No gracious gifts he owns, faults many cloud his fame: His foes rejoice, for none with kindred claim.
– Thirukkural: 868, The might of Hatred, Wealth.
Be the first to comment