குணனும் குடிமையும் குற்றமும் – குறள்: 793

Thiruvalluvar

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.
– குறள்: 793

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாதம் இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்தறிந்து; நல்லதென்று காணின் அவனொடு நட்புச்செய்க.



மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.



G.U. Pope’s Translation

Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.

 – Thirukkural: 793, Investigation formatting Friendships, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.