இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே – குறள்: 1064

Thiruvalluvar

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவுஒல்லாச் சால்பு. – குறள்: 1064

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு சிறிதும் பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு; உலகங்களெல்லாம் ஒன்றாகக் கூடினும் அவற்றில் இட்டுவைக்கும் இடமெல்லாம் கொள்ளாத பெருமையை யுடையதாம்.



மு. வரதராசனார் உரை

வாழ வழி இல்லாத போதும் இரந்துகேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும்.



G.U. Pope’s Translation

Who ne’er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth.

 – Thirukkural: 1064, The Dread of Mendicancy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.