இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர். – குறள்: 218
– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்
கலைஞர் உரை
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்.
மு. வரதராசனார் உரை
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், சொல்வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
G.U. Pope’s Translation
E’en when resources fail, they weary not of ‘kindness due, ‘They to whom duty’s self appears in vision true.
– Thirukkural: 218, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues
Be the first to comment