இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலவர். – குறள்: 607
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர் ;அமைச்சர் கண்டித்து அறிவுரை கூறியும் அதைக்கேளாமையாற் பின்பு அவர் இகழ்ந்து கூறும் சொல்லைக் கேட்பர்.
மு. வரதராசனார் உரை
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
G.U. Pope’s Translation
Who hug their sloth, not noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
– Thirukkural: 607, Unsluggishness, Wealth
Be the first to comment