இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
கலைஞர் உரை
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.
மு. வரதராசனார் உரை
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
G.U. Pope’s Translation
The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall.
– Thirukkural: 448, Seeking the Aid of Great Men, Wealth
Be the first to comment