இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621
– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் வினையாற்றும் போது இடையில் தடைபோலத் துன்பம்வரின் அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக; அதனை மேன்மேல் நெருங்கி மேற்கொள்வதற்கு அது போன்ற வழி வேறொன்றுமில்லை.
மு.வரதராசனார் உரை
துன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத்துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
G.U. Pope’s Translation
Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.
– Thirukkural: 621, Hopefulness in Trouble, Wealth