இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய். – குறள்: 851
– அதிகாரம்: இகல், பால்: பொருள்
கலைஞர் உரை
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாறுபாடு; இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் இனத்தொடு கூடி வாழாமைக்கு ஏதுவான, பிரிவினை யென்னும் தீய குணத்தை வளர்க்கும் மனநோய்; என்று கூறுவர் அறநூலார்.
மு. வரதராசனார் உரை
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
G.U. Pope’s Translation
Hostility disunion’s plague will bring,
That evil quality, to every living thing.
– Thirukkural: 851, Hostility, Wealth.
Be the first to comment