இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. – குறள்: 859
– அதிகாரம்: இகல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே
இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் தனக்கு ஆக்கம் வருங்காலத்தில் மாறுபாடு கொள்ளுதற்குக் கரணியம் ஏற்படினும் அதைக் கொள்ளக் கருதான்; தனக்குக் கேட்டை வருவித்தற்குக் கரணியமின்றியும் அம்மாறுபாட்டில் மேற்படுதலைக் கருதுவான்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
G.U. Pope’s Translation
Men think not hostile thought in fortune’s favouring hour, They cherish enmity when in misfortune’s power.
– Thirukkural: 859, Hostility, Wealth.
Be the first to comment