இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. – குறள்: 856
– அதிகாரம்: இகல், பால்: பொருள்
கலைஞர் உரை
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என
எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் தடம்புரண்டு
கெட்டொழியும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு நல்லதென்று அதனை மேற்கொள்வானது உயிர்வாழ்க்கை; நிலைதாழ்தலும் அதன்பின் முடிதலும் மிகநெருங்கியனவாம்.
மு. வரதராசனார் உரை
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.
G.U. Pope’s Translation
The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near.
– Thirukkural: 856, Hostility, Wealth.