குருவிரொட்டி இணைய இதழ்

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை – குறள்: 858


இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.
– குறள்: 858

– அதிகாரம்: இகல், பால்: பொருள்



கலைஞர் உரை

மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் உள்ளத்தினாலெழும் மாறுபாட்டை ஏற்காது விடுதல் ஒருவனுக்கு ஆக்கந் தருவதாம்; அங்ஙமன்றி அதில் மேற்படுவதில் முனையின் , கேடும் அவனிடத்து வருவதில் முனையும்.



மு. வரதராசனார் உரை

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.



G.U. Pope’s Translation

‘Tis gain to turn the soul from enmity;
Ruin reigns where this hath mastery.

Thirukkural: 858, Hostility, Wealth.