இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. – குறள்: 539
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசர் தம் மகிழ்ச்சியால் மயங்கும் போது ; முன்பு அத்தகைய மயக்கத்தாற் தம் கடமையை மறந்து கெட்டவரை நினைத்துப் பார்க்க.
மு. வரதராசனார் உரை
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.
G.U. Pope’s Translation
Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought.
– Thirukkural: 539, Unforgetfulness, Wealth