இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. – குறள்: 951
– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்
கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்
பிறந்தவர்களாகக் கருத முடியாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாகவாகா.
மு. வரதராசனார் உரை
நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
G.U. Pope’s Translation
Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.
– Thirukkural: 951, Nobility, Wealth.
Be the first to comment