இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. – குறள்: 879
– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.
கலைஞர் உரை
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது
போல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
களையவேண்டிய முள்மரத்தைக் கையினால் எளிதாகப் பிடுங்கியெறியும் கன்றுப் பருவத்தே களையாவிடினும் , இளமரமாயிருக்கும் போதேனும் வெட்டி. விடுக; அங்ஙனமன்றி அது முதிர்ந்தபின் களையின், அது தன்னைப் பலர்கூடி வெட்டினும் அவர் கைகளைப் பொறுத்தற்கரிய அளவு வருத்தும்.
மு. வரதராசனார் உரை
முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.
G.U. Pope’s Translation
Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, ’twill pierce the hand that pluck it thence.
– Thirukkural: 879, Knowing the Quality of Hate, Wealth.