இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். – குறள்: 1040
– அதிகாரம்: உழவு, பால்: பொருள்
கலைஞர் உரை
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் கண்டால்; நிலமகள் என்னுந் தாய் தனக்குள் சிரிப்பாள்.
மு. வரதராசனார் உரை
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
G.U. Pope’s Translation
The earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty.
– Thirukkural: 1040, Agriculture, Wealth
Be the first to comment