இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. – குறள்: 970
– அதிகாரம்: மானம், பால்: பொருள்.
கலைஞர் உரை
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்
கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தமக்கோ ரிழிவுவந்தவிடத்து அதைத் தாங்காது உடனே உயிர் நீத்த மானியரின் புகழுடம்பை; உலகத்தார் கும்பிட்டு வழுத்துவர்.
மு. வரதராசனார் உரை
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.
G.U. Pope’s Translation
Who , when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!
– Thirukkural: 970, Honour, Wealth.
Be the first to comment