இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. – குறள்: 752
– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்
கலைஞர் உரை
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை
இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட எல்லாரும் தாழ்வாகக் கருதுவர்; வெறொரு நலமும் இல்லாதவராயினும் செல்வ முடையாரை அரசனுட்பட எல்லாரும் மதித்துப் போற்றுவர்.
மு. வரதராசனார் உரை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.
G.U. Pope’s Translation
Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.
– Thirukkural: 752, Way of Accumulating Wealth, Wealth