இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். – குறள்: 87
– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்
கலைஞர் உரை
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று; விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.
மு. வரதராசனார் உரை
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
G.U. Pope’s Translation
To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain.
– Thirukkural: 87, Cherishing Guests, Virtues