இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. – குறள்: 790
– அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால்
கலைஞர் உரை
நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இவர் எமக்கு இத்துணையன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையேம்; என்று சொல்லி ஒருவரையொருவர் பாராட்டினும்; நட்புத்தன் பொலிவிழக்கும்.
மு. வரதராசனார் உரை
இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்
என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.
G.U. Pope’s Translation
Mean is the friendship that men blazon forth, ‘He’s thus to me,’and such to him my worth.
– Thirukkural: 790, Friendship, Wealth
Be the first to comment