இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். – குறள்: 822
– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பு,
மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இனத்தார் போன்றிருந்து உண்மையில் இனத்தார்க்குரிய அன்பில்லாத கரந்த பகைவர் நட்பு; விலைமகளிர் மனம்போல வேறுபடும்.
மு. வரதராசனார் உரை
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
G.U. Pope’s Translation
Friendship of those who seem our kin, but are not really kind,
Will change from hour to hour like woman’s mind.
– Thirukkural: 822, Unreal Friendship, Wealth