இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். – குறள்: 650
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
ஞா. தேவநேயப் பாவாணர்
தாம் கற்று வைத்த நூற்பொருளைப் பிறர் தெளிவாக அறியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் தராத பூவையொப்பர்.
மு. வரதராசனார் உரை
தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
Be the first to comment