குருவிரொட்டி இணைய இதழ்

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் – குறள்: 568


இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு.
– குறள்: 568

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செய்ய வேண்டிய கருமத்தைப்பற்றி அமைச்சரொடு கலந்து எண்ணிச் செய்யாத அரசன் ; அக்கருமந்தப்பியவழிச் சினத்தின் வயப்பட்டு அவர்மேலேற்றிச்சீறின்; அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கிவரும்.



மு. வரதராசனார் உரை

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.



G.U. Pope’s Translation

Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o’er!

 – Thirukkural: 568, Absence of Terrorism, Wealth