குருவிரொட்டி இணைய இதழ்

இன்பம் விழையான் இடும்பை – குறள்: 628


இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். – குறள்: 628

– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது; இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பென்று தெளிந்திருப்பவன்; துன்பம் வந்தவிடத்துத் துன்பமுறுத லில்லை.



மு. வரதராசனார் உரை

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.



G.U. Pope’s Translation

He seeks not joy, to sorrow man is boorn, he knows; Such man will walk unharmed by touch of human woes.

 – Thirukkural: 628, Hopefulness in Trouble, Wealth