இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல்
கலைஞர் உரை
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினை முடித்தலையே விரும்புகின்றவன்; தன் சுற்றமாகிய பொறையின் (பாரத்தின்) வறுமையைப் போக்கி அதைத் தாங்கும் தூணாவன்.
மு. வரதராசனார் உரை
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
G.U. Pope’s Translation
Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen’s grief and stands the pillar of their might.
– Thirukkural: 615, Manly Effort, Wealth