இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். – குறள்: 1042
– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்
கலைஞர் உரை
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு
ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்
நிம்மதி என்பது கிடையாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இம்மையும் மறுமையும் இன்றி வரும் ஒருவனிடத்து வருங்கால் அவனுக்கு இம்மையின்பமும் மறுமையின்பமும் இல்லாவாறு வருவான்.
மு. வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
G.U. Pope’s Translation
Malefactor matchless! poverty destroys
This world’s and the next world’s joys.
– Thirukkural: 1042, Poverty, Wealth