குருவிரொட்டி இணைய இதழ்

இன்மை இடும்பை இரந்துதீர் – குறள்: 1063


இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். – குறள்: 1063

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம்
என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று கருதாது இரப்பால் நீக்குவோமென்று கருதும் வன்மையைப்போல்; வன்மைபாடுள்ளது வேறொன்றுமில்லை.



மு. வரதராசனார் உரை

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.



G.U. Pope’s Translation

Nothing is harder than the hardness that will say, The plague of penury by asking alms we’ll drive away.

 – Thirukkural: 1063, The Dread of Mendicancy, Wealth