இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்நாண்இன்மை நின்றக் கடை. – குறள்: 1019 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும்.அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் [ மேலும் படிக்க …]
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். – குறள்: 650 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர். ஞா. தேவநேயப் பாவாணர் தாம் கற்று [ மேலும் படிக்க …]
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். – குறள்: 528 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment