இன்னாசெய் தாரை ஒறுத்தல் – குறள்: 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
– குறள்: 314

– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்



கலைஞர் உரை

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்குத்தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம்.



மு. வரதராசனார் உரை

இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும்.



G.U. Pope’s Translation

To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.

 – Thirukkural: 314, Not Doing Evil, Virtues



1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.