குருவிரொட்டி இணைய இதழ்

இன்னாசெய் தார்க்கும் இனியவே – குறள்: 987


இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
– குறள்: 987

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

தமக்குத் தீமை செய்தவருக்கும் திரும்ப நன்மை செய்யாமல்
விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்குத் தீயன செய்தவர்க்கும் நல்லனவே செய்யாவிடின்; ஒருவரின் சான்றாண்மையால் என்ன பயனாம் ?



மு. வரதராசனார் உரை

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?



G.U. Pope’s Translation

What fruit doth your perfection yield you say! Unless to men who work you ill good repay?

 – Thirukkural: 987, Perfectness, Wealth