இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630
– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,
அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் தனக்கு இன்பமாகக் கருதுவானாயின்;அதனால் அவன் பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
G.U. Pope’s Translation
Who pain as pleasure takes,he shall acquire
The bliss to which his foes in vain aspire.
– Thirukkural: 630, Hopefulness in Trouble, Wealth