குருவிரொட்டி இணைய இதழ்

இன்னாது இரக்கப் படுதல் – குறள்: 224

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு .

– குறள்: 224

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்

கலைஞர் உரை

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை
பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரைவில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருபொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும்; இரத்தலேயன்றி இரக்கப் படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம்.

மு. வரதராசனார் உரை

ஒருபொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும்; இரத்தலேயன்றி இரக்கப் படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம்.

G.U. Pope’s Translation

The suppliants’cry for aid yeilds scant delight,
Until you see his face with grateful gladness bright.

 – Thirukkural: 224, Giving, Virtues