இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. – குறள்: 99
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
கலைஞர் உரை
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்குமாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந்தருதலை நுகர்ந்தறிகின்றவன் தான் மட்டும் பிறரிடத்தில் வன்சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ !
மு. வரதராசனார் உரை
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
G.U. Pope’s Translation
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?
– Thirukkural: 99, The Utterance of Pleasant Words, Virtues
Be the first to comment