இன்சொலால் ஈரம் அளைஇ – குறள்: 91

Thiruvalluvar

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
.

– குறள்: 91

– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இனிய சொல்லாவன; அன்பு கலந்து; வஞ்சனை யில்லாத; மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.



மு. வரதராசனார் உரை

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.



G.U. Pope’s Translation

Pleasant words are words with all prevading love that burn; Words from his guileless mouth who can the very truth discern.

 – Thirukkural: 91, The Utterance of Pleasant Words, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.