இரக்க இரத்தக்கார்க் காணின் – குறள்: 1051

Thiruvalluvar

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. – குறள்: 1051

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச்
சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இரப்போர் இரக்கத்தக்க ஈகையாளரைக் காணின் அவரிடம் இரக்க; அவர் இல்லையென்று கரந்தாராயின், அது அவர் குற்றமே யன்றி இரந்தவர் குற்றமன்று.



மு. வரதராசனார் உரை

இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.



G.U. Pope’s Translation

When those you find from whom ’tis meet to ask, -for aid apply; Theirs is the sin, not yours, if they the gift deny.

 – Thirukkural: 1051, Mendicancy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.