குருவிரொட்டி இணைய இதழ்

இறந்த வெகுளியின் தீதே – குறள்: 531


இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.
– குறள்: 531

– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; அரசனுக்கு அள விறந்த எரிசினத்திலும் தீயதாம்.



மு. வரதராசனார் உரை

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.



G.U. Pope’s Translation

‘Tis greater ill, if rapture of o’erweening gladness to the soul,
Bring self-forgetfulness, than if transcendent wrath control.

 – Thirukkural: 531, Unforgetfulness, Wealth