இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின். – குறள்: 900
– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாபெருந் தவமுனிவர் வெகுள்வாராயின்; அவரால் வெகுளப்பட்டவர் தலைசிறந்த துணையையுடையவராயினும் தப்பிப் பிழையார்.
மு. வரதராசனார் உரை
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
G.U. Pope’s Translation
Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they’re lost.
– Thirukkural: 900, Not Offending the Great, Wealth.
Be the first to comment