குருவிரொட்டி இணைய இதழ்

இரப்பன் இரப்பாரை எல்லாம் – குறள்: 1067


இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்த
வேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இன்றியமையாமை பற்றி இரக்கநேரின்; தம்மிடமுள்ளதை யில்லையென்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டாமென்று; இவ்வுலகில் இரப்பாரையெல்லாம் நான் இரந்து வேண்டிக் கொள்கின்றேன்.



மு. வரதராசனார் உரை

இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.



G.U. Pope’s Translation

One thing I beg of beggars all ,’If beg ye may,
Of those who hide their wealth , beg not , I pray.

Thirukkural: 1067, The Dread of Mendicancy, Wealth